[தொடர்: 3-100] ஜோதிடம் – குறிகாரன் – சாஸ்திரம் பார்ப்பவன் ஆகியோரிடம் செல்வது

قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّـهُ ۚ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ ﴿ النمل ٦٥﴾

    • அல்லாஹ்வைதவிர வானங்களிலும் பூமியிலுமுள்ள எவரும் மறைவானவற்றை அறிய மாட்டார். என்று நபியே அவர்களிடம் கூறும்.(27:65)

  • யாரேனும் குறிகாரனிடம் சென்று எதாவது ஒரு விசயத்தை கேட்டால் அவரது நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது ( அறிவிப்பவர்:- ஸபியா (ரழி) நூல்:  முஸ்லீம் )
  • யாரேனும் ஜோதிடரிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் அல்லது மாதவிடாய் ஏற்பட்டுள்ள தன் மனைவியிடம் கூடினால் அல்லது தனது மனைவியின் பின் துவாரத்தில் உடலுறவு கொண்டால்  முஹம்மது(ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட வேதத்தை விட்டும் அவர் விலகிக்கொண்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்:-  அபூ ஹுரைரா (ரழி) நூல்:அபூதாவுத் )
  • மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஜோதிடம் பற்றி வினவினர் அதற்கவர்கள் “அது ஒன்றுமில்லை” என்று கூறினார்கள். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் சொல்வது உண்மையாகி விடுகின்றதே? என்று மக்கள் கேட்டதும், ” அந்த உண்மை எவ்வாறெனில் ஜின் அதை வானிலிருந்து ஒட்டுக்கேட்டு தமது சகாக்களின் காதுகளில் போட்டுவிடுகின்றது,  பிறகு அவை அத்துடன் நூறு பொய்களை கலந்து ஜோதிடர்களிடம் சேர்த்து விடுகின்றன ”  என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.  ( அறிவிப்பவர்:- ஆயிஷா (ரழி)  நூல்: புகாரி-5762, முஸ்லீம் )

பயன்கள்:-

  1. ஜோதிடர்கள், குறிகாரர்களிடம் செல்வது ஹாரமாகும்.
  1. ஜோதிடர்கள் ஷைத்தானிய-ஜின்கள் வழியாக‌ ஒரேஒரு உண்மையை மட்டும் தெரிந்து கொண்டு அதில் நூறு பொய்களை கலந்துவிடுகின்றனர்.
  1. கைரேகை பார்ப்பது, பீங்கானில் எழுதி கரைத்து குடிப்பது, ராசி பலன் பார்ப்பது அனைத்தும் குறிபார்ப்பது மற்றும் வானசாஸ்திரம் பார்ப்பதில் அடங்கும்.
( எழுத்தாக்க உதவி: சிங்கை ஷாஜஹான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *