[தொடர்: 8-100] அல்லாஹ்வின் மீது தவக்குல்-நம்பிக்கை வைத்தல்

وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّـهِ فَهُوَ حَسْبُهُ ۚ

﴿ الطلاق ٣﴾

  • யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கின்றரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன்.(65: 3)

اللَّـهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۚ وَعَلَى اللَّـهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ﴿ التغابن ١٣﴾

  • அல்லாஹ் -அவனைத் தவிர வணக்கத்திர்க்குரிய இறைவன் இல்லை, மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை வைக்கட்டும். (64:13)
  • மறுமை நாளின் காட்சிகளில் பல உம்மத்தினர் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டனர். அப்போது நான் ஒரு நபியைப் பார்த்தேன் அவருடன் சிறு கூட்டமே இருந்தது. இன்னொரு நபியை கண்டேன் அவருடன் ஒன்றிரண்டு பேர் இருந்தனர். மற்றொரு  நபியை கண்டேன்  அவருடன் யாருமே இல்லை. அந்நேரத்தில் ஒரு மாபெரும் கூட்டம் எனக்கு காட்டப்பட்டது. அவர்கள் என் உம்மத்தினர் என்று  நான் எண்ணிக்கொன்டிருந்த அதே நேரத்தில்  அவர்கள் மூஸாவும் அவருடைய சமுதாயத்தினரும் என்று எனக்கு கூறப்பட்டது.

பிறகு மற்றொரு பெரும் கூட்டத்தை நான் பார்த்தேன். இவர்கள் தான் உமது உம்மத்தினர் என எனக்குக் கூறப்பட்டது.

அவர்களுடன் கேள்வி கணக்கின்றி, வேதனையின்றி சுவர்க்கம் செல்லக்கூடிய  எழுபதாயிரம் பேர் இருந்தனர். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு அவர்கள் எழுந்து தமது வீட்டிற்குள் சென்று விட்டனர். அதன் பிறகு அங்கிருந்த மக்கள் அவர்கள் யார் என்ற சர்ச்சையில் மூழ்கி விட்டனர். சிலர், அவர்கள் இஸ்லாத்திலேயே பிறந்து அல்லாஹ்விற்கு எதையுமே இணை கற்பிக்காதவர்களாக இருக்கலாம் என்றும் சிலர் வேறு விதமாகவும் சொல்லிக்கொன்டார்கள்.

அதன் பிறகு  நபி (ஸல்) அவர்கள் வந்ததும் மக்கள் அவர்களிடம் விஷயத்தை கூறினார்கள். அப்போது அவர்கள் தாம் பிறரிடம் ஓதிப்பார்க்க தேடாதவர்களும், (நோய்க்காக) சூடு போடாதவர்களும், சகுனம் பார்க்காதவர்களும் ஆவர். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:- (அப்பாஸ் (ரழி)  நூல்: புஹாரி-5270 – முஸ்லிம்)

பயன்கள்:-

  1. தவக்குல் (நம்பிக்கை) வைப்பதன் நிலையை அறிந்து கொள்வது. அது வணக்கங்களில் மிக முக்கியமானது.
  1. தவக்குலை மெய்ப்படுத்துவது கேள்வி கணக்கின்றி சுவர்க்கம் செல்வதற்குக் காரணமாக அமையும்.

( எழுத்தாக்க உதவி: சிங்கை ஷாஜஹான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *