[தொடர்: 9-100] துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள்

  • “ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போதுதான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்” என்பது நபிமொழி. (அறிவிப்பவர்:- அபூ ஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
  • பாங்கு இகாமத்திற்கிடையே கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்பது நபிமொழி (அறிவிப்பவர்:-அனஸ் (ரழி) நூல்:  திர்மிதி)
  • “இரண்டு துஆக்கள் நிராகரிக்கப்படமாட்டாது அல்லது நிராகரிக்கப்படுவதென்பது மிக குறைவு. அவை பாங்கின் போதும், சிலர் சிலரிடம் மோதும் போர்க்களத்தின் போதும் கேட்கப்படும் துஆக்களாகும்” என்பது நபி மொழி (அறிவிப்பவர்:- ஸஹ்ல் பின் ஸ்ஃத் (ரழி)  நூல்:அபூதாவுத்)
  • “இரவை மூன்றாகப் பிரித்து கடைசிப்பகுயிதில் இறைவன் முதல் வானத்துக்கு தினமும் இறங்குகிறான். என்னிடம் பிரார்த்திப்பவர் உண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் உண்டா? நான் அவருக்கு கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புத் தேடுபவர் உண்டா? நான் அவருக்கு மன்னிக்கிறேன்” என்று கூறுகிறான். (அறிவிப்பவர்:- அபூஹுரைரா (ரழி)  நூல்: முஸ்லிம்)
  • ஒவ்வொரு இரவிலும் ஒரு நேரம் இருக்கிறது. அந்நேரத்தை ஒரு முஸ்லிம் இவ்வுலக மறு உலக நன்மையை இறைவனிடம் பிரார்த்தித்தவாறு அடைந்தால் இறைவன் அவனுக்கு அதை வழங்காமல் இருக்கமாட்டான் என்பது நபி மொழி (அறிவிப்பவர்:- ஜாபிர்  (ரழி)  நூல்: முஸ்லிம்)

 பயன்கள்:-

  1. ஏனைய நேரங்களை விட பிரார்த்தனை அங்கீகாரிக்கப்படுவதை அதிகம் எதிர்பார்க்கக்கூடிய சில நேரங்கள் இருக்கின்றன.
  1. இந்நேரங்களைப் பேணி இதில் அதிகமதிகம் பிரார்த்தனை செய்வதற்கு ஆர்வமூட்டப்பட்டுள்ளது.
  1. ஸஜ்தாவின் போது, பாங்கு இகாமத்துக்கிடையில், இரவின் கடைசி நேரம், போர்களத்தில் எதிரிகளைச் சந்திக்கும்போது ஆகியவை இந்த நேரங்களைச் சார்ந்தனவாகும்.

( எழுத்தாக்க உதவி: சிங்கை ஷாஜஹான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *