”ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை ” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்ஷா அல்லாஹ் அத்தகைய பாக்கியவான்களாக நீங்களும் ஆகப்போகின்றவர்கள். ஹஜ்ஜு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகளை பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும்.
- முதலாவது இக்லாஸ் (அல்லாஹ்விற்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது)
- இரண்டாவது நபி(ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவது.
ஹஜ்ஜைப்பற்றிய சரியான தெளிவு இல்லாததினால் இன்று பல ஹாஜிகள் ஹஜ் கிரியைகளை தவறான முறையில் செய்கின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜை சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதினால் இத்தவறுகளைளை நீக்கலாம் என்ற நன்னோக்கோடு இச்சிறு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.