மரணமும் மண்ணறையும் (வீடியோ)

மரணம் மனித வாழ்க்கையில் யாரும் மறுதலிக்க முடியாத இறுதி நிகழ்வு. இதை வென்றவர் யாருமில்லை, இனி வெல்லப்போவதும் இல்லை. இவ்விஷயத்தில் உலகமே மாற்றுக்கருத்தின்றி ஒருமித்த குரலாக ஒலிக்கிறது. இத்தகைய மரணத்தைப்பற்றி இஸ்லாத்தில் மட்டும்தான் தெளிவான விளக்கம் உள்ளது. மரணம் எப்போது வரும், அது யாருடைய கைவசம் உள்ளது, அது நிகழும்போது மனிதனின் நிலையென்ன, இதுபோன்ற அனைத்து கேள்விகளுக்கும் இஸ்லாம் ஒன்றுதான் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது.

“உங்களில் ஒருவருக்கு மரணம் வரும்போது, நீங்கள் அனைவரும் அவருக்கு அருகில் இருப்பீர்கள், அவரது மரணத்தை உங்களது கண்ணால் பார்த்தவர்களாக, அதை தடுப்பதற்கு எதுவும் செய்ய இயலாத நிலையில், கைசேதப்பட்டு நிற்பீர்கள், அறிந்துகொள்ளுங்கள் ! உங்களைவிட மரணிப்பவருக்கு மிக நெருக்கமாக அல்லாஹ் இருக்கிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” இது குர் ஆன் கூறும் செய்தி.  இத்தகைய மரணமும் அதன் தொடர்ச்சியான மண்ணறை வாழ்க்கையும் வெற்றியாக அமைய வேண்டுமெனில் நாம் என்ன செய்ய வேண்டும்.. (தொடர்க……. )
ரமளான் இரவு நிகழ்ச்சி – 25-7-2013 – ஜுபைல் தஃவா நிலையம்
அஷ்ஷைஹ் யாஸிர் ஃபிர்தௌஸி, இஸ்லாமிய அழைப்பாளர்,

[youtube id=7DRldwmibr0]

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *