[ஹதீஸ்] : இறைவனை நாம் காண்போமா ?

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர் அவர்களே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?’ என்று மக்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘பெளர்ணமி இரவில் முழு நிலாவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?’ என்று கேட்டார்கள். மக்கள் ‘இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் இருக்குமா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
இவ்வாறுதான் உங்களுடைய இறைவனை நீங்கள் (மறுமை நாளில்) காண்பீர்கள்.

அல்லாஹ் மறுமைநாளில் மனிதர்களை ஒன்றுகூட்டி, ‘(உலகத்தில்) யார் எதை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்பற்றிச் செல்லட்டும்’ என்று கூறுவான். எனவே, சூரியனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்வார்கள். சந்திரனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்வார்கள். ஷைத்தான்களை வழிபட்டு வந்தவர்கள் ஷைத்தான்களைப் பின்தொடர்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியருப்பார்கள். அவர்களிடையே ‘பரிந்துரைப்போர்’ அல்லது ‘நயவஞ்சகர்கள்’ இருப்பார்கள். அப்போது அல்லாஹ் அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத அவர்களிடம் (அவர்கள் அறிந்திராத தோற்றத்தில்) வந்து, ‘நானே உங்களுடைய இறைவன்’ என்று கூறுவான். அதற்கு அவர்கள், ‘எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம் நீ எங்கள் இறைவன் அல்லன்). அவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்’ என்று கூறுவர்.

அப்போது அல்லாஹ் அவர்களிடம் அவர்கள் அறிந்து கொள்ளும் தோற்றத்தில் வந்து, ‘நானே உங்களுடைய இறைவன்’ என்று சொல்வான். அப்போது அவர்கள், ‘நீதான் எங்கள் இறைவன்’ என்று கூறியபடி அவனைப் பின்தொடர்வார்கள். அங்கு நரகத்திற்கு மேலே பாலம் அமைக்கப்படும. அப்போது நானும் என் சமுதாயத்தாருமே அ(ந்தப் பாலத்)தை முதல் முதலாகக் கடப்போம். அன்றைய தினம் இறைத் தூதர்கள் மட்டுமே பேசுவார்கள். அப்போது இறைத்தூதர்களின் பிரார்த்தனை ‘(இறைவா!) காப்பாற்று! காப்பாற்று!’ என்பதாகவே இருக்கும்.

கருவேல மரத்தின் முற்களைப் போன்ற கொக்கிகள் நரகத்தில் மாட்டப்பட்டிருக்கும். கருவேல மரத்தைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே!’ என்று பதிலளித்தனர். அந்தக் கொக்கிகள் கருவேல மர முள்ளைப் போன்றுதானிருக்கும். ஆயினும், அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெருவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் (தீய) செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும். மக்களில் சிலர் தம் செயலினால் அழிந்து விடுவார்கள். இன்னும் சிலர் (கொக்கியின் பிடி தளர்ந்து நரகத்தில்) விழுந்து விடுவார்கள். மற்றச் சிலர் வேறு நிலையில் இருப்பார்கள்.

பிறகு இறைவன் காட்சியளித்து, தன் அடியார்களிடையே தீர்ப்பளித்து முடித்த பின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரை தன் கருணையால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். எனவே, அல்லாஹ்வுக்கு எதையும் இணைகற்பிக்காமல் வாழ்ந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றிவிடுமாறு வானவர்களுக்கு அவன் கட்டளையிடுவான். வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என உறுதி கூறியவர்களில் யாருக்குத் தான் கருணை புரிய வேண்டுமென நாடுகிறானோ அவர்களை (நரகத்திலிருந்து வெளியேற்றிடுமாறு ஆணையிடுவான்).

நரகத்திலிருக்கும் அவர்களை (அவர்கள் செய்த) சஜ்தாவின் (சிரவணக்கத்தின்) அடையாளத்தை வைத்து வானவர்கள் இனங் கண்டுகொள்வார்கள். ஆதமின் மகனின் (-மனிதனின்) சஜ்தா அடையாள(ம் உள்ள இட)த்தைத் தவிர அவனை (முழுமையாக) நரகம் தீண்டும். (ஆனால்,) சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். எனவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்துவிட்டநிலையில் நரகத்திலிருந்து வெளியேறுவார்கள். அப்போது அவர்களின் மீது ஜீவ நீர் (-மாஉல் ஹயாத்) ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள்.

பின்னர் அடியார்களிடையே அல்லாஹ் தீர்ப்பளித்து முடிக்கும்போது நரகத்தை முன்னோக்கியபடி ஒருவர் எஞ்சியிருப்பார். அவர்தாம் சொர்க்கத்தில் நுழையக் காத்திருக்கும் கடைசி நரகவாசியாவார். அவர், ‘என் இறைவா! நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்புவாயாக! அதன் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது; அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது’ என்று கூறுவார். பின்னர் எதைச் சொல்லி அவர் பிரார்த்திக்க வேண்டுமென அல்லாஹ் நாடுவானோ அதைச் சொல்லி அவர் பிரார்த்திப்பார்.

பிறகு அல்லாஹ் (அவரிடம்), ‘நீ கேட்பதை நான் கொடுத்தால் இஃதல்லாத வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடும் அல்லவா?’ என்பான். அதற்கு அவர், ‘இல்லை. உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் நான் உன்னிடம் கேட்க மாட்டேன்’ என்று கூறி, இறைவன் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார். அப்போது அல்லாஹ் நரகத்தைவிட்டு அவரின் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவான்.

அவர் சொர்க்கத்தை முன்னோக்கி பார்வையைச் செலுத்தும்போது அல்லாஹ் நாடிய நேரம் வரை அவர் அமைதியாக இருப்பார். பிறகு, ‘என் இறைவா! சொர்க்கத்தின் வாசல் வரை என்னைக் கொண்டு செல்வாயாக!’ என்று கூறுவார். அதற்கு அல்லாஹ் அவரிடம், ‘உனக்கு வழங்கப்பட்ட இதைத் தவிர வேறெதையும் ஒருபோதும் என்னிடம் நீ கேட்கமாட்டாய் என உறுதிமொழிகளையும் வாக்குறுதிகளையும் நீ வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?’ என்று கூறுவான். அதற்கு அவர், ‘இல்லை. உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்’ எனக் கூறி, அவன் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் (இறைவனிடம்) வழங்குவார்.
எனவே, அல்லாஹ் அவரை சொர்க்கத்தின் வாசல் வரை கொண்டு செல்வான்.

சொர்க்க வாசலில் அவர் நிற்கும்போது சொர்க்கவாசல் அவருக்காகத் திறக்கும். அப்போது அவர் அதிலுள்ள உல்லாச சுகங்களைப் பார்த்தவாறு அல்லாஹ் நாடிய வரை அமைதியாக இருப்பார். பிறகு, ‘என் இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!’ என்று கூறுவார். அப்போது அல்லாஹ், ‘உனக்கு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் கேட்கமாட்டேன் என்று கூறி வாக்குறுதிகளையும் உறுதி மொழிகளையும் நீ வழங்கவில்லையா?’ என்று கேட்டுவிட்டு, ‘மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன?’ என்று கூறுவான்.
அதற்கு அவர், ‘என் இறைவா! உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாய் நான் ஆம்விடக் கூடாது’ என்று பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவரைக் கண்டு அல்லாஹ் சிரித்துவிடுவான். அவரைக் கண்டு சிரித்ததும், ‘சொர்க்கத்தில் நுழைந்து கொள்’ என்று அவரிடம் அல்லாஹ் கூறுவான்.

சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின் ‘நீ (விரும்பிய) அதை ஆசைப்படலாம்’ என்று அவரிடம் இறைவன் சொல்வான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டு தம் இறைவனிடம் கேட்பார். இறுதியில் அல்லாஹ்வே அவருக்கு (ஆசைப்பட வேண்டியவற்றை ஒவ்வொன்றாகச் சொல்லி) ‘இன்னதை இன்னதை நீ ஆசைப்படு’ என்று நினைவுபடுத்துவான். கடைசியில் அந்த மனிதரின் ஆசைகள் எல்லாம் அடங்கும். (அப்போது) அல்லாஹ், ‘(நீ கேட்ட) இதுவும் உனக்குக் கிடைக்கும். இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்று சொல்வான்.

7438. அதாஉ இப்னு யஸீத்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் மேற்கண்ட ஹதீஸை அறிவித்தபோது அவர்களுடன் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களும் இருந்தார்கள். அன்னார் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸிற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இறுதியில் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், ‘இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுவான்: என அறிவித்தபோது தான் அபூ ஸயீத்(ரலி) அவர்கள் (குறுக்கிட்டு,) ‘இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்றல்லவா ஹதீஸ் இருக்கிறது அபூ ஹுரைராவே!’ என்று கேட்டார்கள். அபூ ஹுரைரா(ரலி) அவர்கள், ‘நான் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து ‘உனக்கு இதுவும் இதைப் போன்ற இன்னொரு மடங்கும் கிடைக்கும்’ என்று கூறினார்கள் எனவே மனனம் செய்துள்ளேன்’ என்றார்கள். அதற்கு அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள், ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ‘இதுவும் இதைப் போன்று பத்து மடங்குகளும் உனக்குக் கிடைக்கும்’ என்ற சொல்லையே மனனம் செய்துள்ளேன் என உறுதி கூறுகிறேன்’ என்றார்கள். அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் ‘அந்த மனிதர் தாம் சொர்க்கத்தில் இறுதியாக நுழையும் மனிதராவார்’ என்றார்கள். (புகாரி – 7437 & 7438)

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّاسَ، قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ هَلْ تُضَارُّونَ فِي الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ‏”‏‏.‏ قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏”‏ فَهَلْ تُضَارُّونَ فِي الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ ‏”‏‏.‏ قَالُوا لاَ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏”‏ فَإِنَّكُمْ تَرَوْنَهُ كَذَلِكَ،

يَجْمَعُ اللَّهُ النَّاسَ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ مَنْ كَانَ يَعْبُدُ شَيْئًا فَلْيَتَّبِعْهُ‏.‏ فَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الشَّمْسَ الشَّمْسَ، وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الْقَمَرَ الْقَمَرَ، وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الطَّوَاغِيتَ الطَّوَاغِيتَ، وَتَبْقَى هَذِهِ الأُمَّةُ فِيهَا شَافِعُوهَا ـ أَوْ مُنَافِقُوهَا شَكَّ إِبْرَاهِيمُ ـ فَيَأْتِيهِمُ اللَّهُ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ‏.‏ فَيَقُولُونَ هَذَا مَكَانُنَا حَتَّى يَأْتِيَنَا رَبُّنَا فَإِذَا جَاءَنَا رَبُّنَا عَرَفْنَاهُ فَيَأْتِيهِمُ اللَّهُ فِي صُورَتِهِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ‏.‏ فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا‏.‏ فَيَتْبَعُونَهُ وَيُضْرَبُ الصِّرَاطُ بَيْنَ ظَهْرَىْ جَهَنَّمَ، فَأَكُونُ أَنَا وَأُمَّتِي أَوَّلَ مَنْ يُجِيزُهَا، وَلاَ يَتَكَلَّمُ يَوْمَئِذٍ إِلاَّ الرُّسُلُ، وَدَعْوَى الرُّسُلِ يَوْمَئِذٍ اللَّهُمَّ سَلِّمْ سَلِّمْ‏.‏ وَفِي جَهَنَّمَ كَلاَلِيبُ مِثْلُ شَوْكِ السَّعْدَانِ، هَلْ رَأَيْتُمُ السَّعْدَانَ ‏”‏‏.‏ قَالُوا نَعَمْ يَا رَسُولَ اللَّهِ‏.‏ قَالَ ‏”‏ فَإِنَّهَا مِثْلُ شَوْكِ السَّعْدَانِ، غَيْرَ أَنَّهُ لاَ يَعْلَمُ مَا قَدْرُ عِظَمِهَا إِلاَّ اللَّهُ، تَخْطَفُ النَّاسَ بِأَعْمَالِهِمْ، فَمِنْهُمُ الْمُوبَقُ بَقِيَ بِعَمَلِهِ، أَوِ الْمُوثَقُ بِعَمَلِهِ، وَمِنْهُمُ الْمُخَرْدَلُ أَوِ الْمُجَازَى أَوْ نَحْوُهُ، ثُمَّ يَتَجَلَّى حَتَّى إِذَا فَرَغَ اللَّهُ مِنَ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ وَأَرَادَ أَنْ يُخْرِجَ بِرَحْمَتِهِ مَنْ أَرَادَ مِنْ أَهْلِ النَّارِ أَمَرَ الْمَلاَئِكَةَ أَنْ يُخْرِجُوا مِنَ النَّارِ مَنْ كَانَ لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، مِمَّنْ أَرَادَ اللَّهُ أَنْ يَرْحَمَهُ مِمَّنْ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، فَيَعْرِفُونَهُمْ فِي النَّارِ بِأَثَرِ السُّجُودِ، تَأْكُلُ النَّارُ ابْنَ آدَمَ إِلاَّ أَثَرَ السُّجُودِ، حَرَّمَ اللَّهُ عَلَى النَّارِ أَنْ تَأْكُلَ أَثَرَ السُّجُودِ، فَيَخْرُجُونَ مِنَ النَّارِ قَدِ امْتُحِشُوا، فَيُصَبُّ عَلَيْهِمْ مَاءُ الْحَيَاةِ فَيَنْبُتُونَ تَحْتَهُ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ، ثُمَّ يَفْرُغُ اللَّهُ مِنَ الْقَضَاءِ بَيْنَ الْعِبَادِ،

وَيَبْقَى رَجُلٌ مُقْبِلٌ بِوَجْهِهِ عَلَى النَّارِ هُوَ آخِرُ أَهْلِ النَّارِ دُخُولاً الْجَنَّةَ فَيَقُولُ أَىْ رَبِّ اصْرِفْ وَجْهِي عَنِ النَّارِ، فَإِنَّهُ قَدْ قَشَبَنِي رِيحُهَا وَأَحْرَقَنِي ذَكَاؤُهَا‏.‏ فَيَدْعُو اللَّهَ بِمَا شَاءَ أَنْ يَدْعُوَهُ ثُمَّ يَقُولُ اللَّهُ هَلْ عَسَيْتَ إِنْ أُعْطِيتَ ذَلِكَ أَنْ تَسْأَلَنِي غَيْرَهُ‏.‏ فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ، وَيُعْطِي رَبَّهُ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ مَا شَاءَ، فَيَصْرِفُ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ، فَإِذَا أَقْبَلَ عَلَى الْجَنَّةِ وَرَآهَا سَكَتَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَىْ رَبِّ قَدِّمْنِي إِلَى باب الْجَنَّةِ‏.‏ فَيَقُولُ اللَّهُ لَهُ أَلَسْتَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ أَنْ لاَ تَسْأَلَنِي غَيْرَ الَّذِي أُعْطِيتَ أَبَدًا، وَيْلَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ‏.‏ فَيَقُولُ أَىْ رَبِّ‏.‏ وَيَدْعُو اللَّهَ حَتَّى يَقُولَ هَلْ عَسَيْتَ إِنْ أُعْطِيتَ ذَلِكَ أَنْ تَسْأَلَ غَيْرَهُ‏.‏ فَيَقُولُ لاَ وَعِزَّتِكَ لاَ أَسْأَلُكَ غَيْرَهُ، وَيُعْطِي مَا شَاءَ مِنْ عُهُودٍ وَمَوَاثِيقَ، فَيُقَدِّمُهُ إِلَى باب الْجَنَّةِ، فَإِذَا قَامَ إِلَى باب الْجَنَّةِ انْفَهَقَتْ لَهُ الْجَنَّةُ فَرَأَى مَا فِيهَا مِنَ الْحَبْرَةِ وَالسُّرُورِ، فَيَسْكُتُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَسْكُتَ ثُمَّ يَقُولُ أَىْ رَبِّ أَدْخِلْنِي الْجَنَّةَ‏.‏ فَيَقُولُ اللَّهُ أَلَسْتَ قَدْ أَعْطَيْتَ عُهُودَكَ وَمَوَاثِيقَكَ أَنْ لاَ تَسْأَلَ غَيْرَ مَا أُعْطِيتَ ـ فَيَقُولُ ـ وَيْلَكَ يَا ابْنَ آدَمَ مَا أَغْدَرَكَ‏.‏ فَيَقُولُ أَىْ رَبِّ لاَ أَكُونَنَّ أَشْقَى خَلْقِكَ فَلاَ يَزَالُ يَدْعُو حَتَّى يَضْحَكَ اللَّهُ مِنْهُ فَإِذَا ضَحِكَ مِنْهُ قَالَ لَهُ ادْخُلِ الْجَنَّةَ‏.‏ فَإِذَا دَخَلَهَا قَالَ اللَّهُ لَهُ تَمَنَّهْ‏.‏ فَسَأَلَ رَبَّهُ وَتَمَنَّى حَتَّى إِنَّ اللَّهَ لَيُذَكِّرُهُ يَقُولُ كَذَا وَكَذَا، حَتَّى انْقَطَعَتْ بِهِ الأَمَانِيُّ قَالَ اللَّهُ ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ ‏”‏‏.‏

قَالَ عَطَاءُ بْنُ يَزِيدَ وَأَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ مَعَ أَبِي هُرَيْرَةَ لاَ يَرُدُّ عَلَيْهِ مِنْ حَدِيثِهِ شَيْئًا حَتَّى إِذَا حَدَّثَ أَبُو هُرَيْرَةَ أَنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ ‏”‏ ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ ‏”‏‏.‏ قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ ‏”‏ وَعَشَرَةُ أَمْثَالِهِ مَعَهُ ‏”‏‏.‏ يَا أَبَا هُرَيْرَةَ‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ مَا حَفِظْتُ إِلاَّ قَوْلَهُ ‏”‏ ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ ‏”‏‏.‏ قَالَ أَبُو سَعِيدٍ    الْخُدْرِيُّ أَشْهَدُ أَنِّي حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَوْلَهُ ‏”‏ ذَلِكَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ ‏”‏‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ فَذَلِكَ الرَّجُلُ آخِرُ أَهْلِ الْجَنَّةِ دُخُولاً الْجَنَّةَ‏.‏  —  كتاب التوحيد- صحيح البخاري )

Narrated ‘Ata’ bin Yazid Al-Laithi:

On the authority of Abu Huraira: The people said, “O Allah’s Messenger (ﷺ)! Shall we see our Lord on the Day of Resurrection?” The Prophet (ﷺ) said, “Do you have any difficulty in seeing the moon on a full moon night?” They said, “No, O Allah’s Messenger (ﷺ).” He said, “Do you have any difficulty in seeing the sun when there are no clouds?” They said, “No, O Allah’s Messenger (ﷺ).” He said, “So you will see Him, like that. Allah will gather all the people on the Day of Resurrection, and say, ‘Whoever worshipped something (in the world) should follow (that thing),’ so, whoever worshipped the sun will follow the sun, and whoever worshiped the moon will follow the moon, and whoever used to worship certain (other false) deities, he will follow those deities. And there will remain only this nation with its good people (or its hypocrites). (The sub-narrator, Ibrahim is in doubt.) Allah will come to them and say, ‘I am your Lord.’ They will (deny Him and) say, ‘We will stay here till our Lord comes, for when our Lord comes, we will recognize Him.’ So Allah will come to them in His appearance which they know, and will say, ‘I am your Lord.’ They will say, ‘You are our Lord,’ so they will follow Him.

Then a bridge will be laid across Hell (Fire)’ I and my followers will be the first ones to go across it and none will speak on that Day except the Apostles. And the invocation of the Apostles on that Day will be, ‘O Allah, save! Save!’ In Hell (or over The Bridge) there will be hooks like the thorns of As-Sa’dan (thorny plant). Have you seen As-Sa’dan? ” They replied, “Yes, O Allah’s Messenger (ﷺ)!” He said, “So those hooks look like the thorns of As-Sa’dan, but none knows how big they are except Allah. Those hooks will snap the people away according to their deeds. Some of the people will stay in Hell (be destroyed) because of their (evil) deeds, and some will be cut or torn by the hooks (and fall into Hell) and some will be punished and then relieved. When Allah has finished His Judgments among the people, He will take whomever He will out of Hell through His Mercy. He will then order the angels to take out of the Fire all those who used to worship none but Allah from among those whom Allah wanted to be merciful to and those who testified (in the world) that none has the right to be worshipped but Allah. The angels will recognize them in the Fire by the marks of prostration (on their foreheads), for the Fire will eat up all the human body except the mark caused by prostration as Allah has forbidden the Fire to eat the mark of prostration. They will come out of the (Hell) Fire, completely burnt and then the water of life will be poured over them and they will grow under it as does a seed that comes in the mud of the torrent.

Then Allah will finish the judgments among the people, and there will remain one man facing the (Hell) Fire and he will be the last person among the people of Hell to enter Paradise. He will say, ‘O my Lord! Please turn my face away from the fire because its air has hurt me and its severe heat has burnt me.’ So he will invoke Allah in the way Allah will wish him to invoke, and then Allah will say to him, ‘If I grant you that, will you then ask for anything else?’ He will reply, ‘No, by Your Power, (Honor) I will not ask You for anything else.’ He will give his Lord whatever promises and covenants Allah will demand.

So Allah will turn his face away from Hell (Fire). When he will face Paradise and will see it, he will remain quiet for as long as Allah will wish him to remain quiet, then he will say, ‘O my Lord! Bring me near to the gate of Paradise.’ Allah will say to him, ‘Didn’t you give your promises and covenants that you would never ask for anything more than what you had been given? Woe on you, O Adam’s son! How treacherous you are!’ He will say, ‘O my lord,’ and will keep on invoking Allah till He says to him, ‘If I give what you are asking, will you then ask for anything else?’ He will reply, ‘No, by Your (Honor) Power, I will not ask for anything else.’

Then he will give covenants and promises to Allah and then Allah will bring him near to the gate of Paradise. When he stands at the gate of Paradise, Paradise will be opened and spread before him, and he will see its splendor and pleasures whereupon he will remain quiet as long as Allah will wish him to remain quiet, and then he will say, O my Lord! Admit me into Paradise.’ Allah will say, ‘Didn’t you give your covenants and promises that you would not ask for anything more than what you had been given?’ Allah will say, ‘Woe on you, O Adam’s son! How treacherous you are! ‘

The man will say, ‘O my Lord! Do not make me the most miserable of Your creation,’ and he will keep on invoking Allah till Allah will laugh because of his sayings, and when Allah will laugh because of him, He will say to him, ‘Enter Paradise,’ and when he will enter it, Allah will say to him, ‘Wish for anything.’ So he will ask his Lord, and he will wish for a great number of things, for Allah Himself will remind him to wish for certain things by saying, ‘(Wish for) so-and-so.’ When there is nothing more to wish for, Allah will say, ‘This is for you, and its equal (is for you) as well.”

‘Ata’ bin Yazid added: Abu Sa’id Al-Khudri who was present with Abu Huraira, did not deny whatever the latter said, but when Abu Huraira said that Allah had said, “That is for you and its equal as well,” Abu Sa’id Al-Khudri said, “And ten times as much, O Abu Huraira!” Abu Huraira said, “I do not remember, except his saying, ‘That is for you and its equal as well.'” Abu Sa’id Al-Khudri then said, “I testify that I remember the Prophet (ﷺ) saying, ‘That is for you, and ten times as much.’ ‘ Abu Huraira then added, “That man will be the last person of the people of Paradise to enter Paradise.” (Reference : Sahih al-Bukhari 7437, 7438)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *