கேம்ப் தஃவா

இஹ்லாஸும் மறுமை நாளில் முஹ்லிஸீன்களும் (v)

அல் – ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு சார்பாக 31- 03- 2016 வியாழன் இரவு எஸ்கேஎஸ் கேம்பில் வைத்து மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடை பெற்றது . இந்நிகழ்ச்சியில் மௌலவி முஜாஹித் பின் ரஸீன் அவர்கள் இஹ்லாஸும் மறுமையில் முஹ்லிஸீன்களும் என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்கள். பல கேம்ப்களிலிருந்து சகோதரர்கள் வருகை தந்து பயனடைந்தனர் பயானிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகளும் வழங்கப் பட்டன . வருகை தந்த அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சிறப்பு பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: ஷேஹ் ...

Read More »

கேம்ப் டேபிள் தஃவா (v)

அல்லாஹ்வின் பேரருளால் இன்று 23 மார்ச் 2016 புதன்கிழமை மாலை 5 மணிமுதல் 8 மணிவரை, ஜுபைல் ராயல் கமிஸன் கேம்ப்-14 இல் மாற்றுமத சகோதரர்களை நேரில் சந்தித்து இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் கேம்ப் டேபிள் தஃவா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு இஸ்லாத்தின் இறைக்கோட்பாடு, ஏகத்துவம், மறுமை வாழ்க்கை குறித்து சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இறையருளால் தமிழகத்தைச்சார்ந்த இரண்டு சகோதரர்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Read More »

கேம்ப் தஃவா ஜுபைல் ஆர்ஸி-14

அல்-ஜுபைல் ஆர்ஸி-14-ல் கடந்த 19,20-01-2015 ஆகிய இருதினங்கள் கேம்ப் தஃவா நிகழ்சி நடந்தது இதில் முதல் நாள் இஷா தொழுகைக்குப்பின் சகோதரர் ஸப்ராஸ் ரியாளுஸ்ஸாலிஹீனிலிருந்து பாவமன்னிப்பு என்ற தலைப்பிலிருந்து ஒரு சில ஹதீஸ்களை வாசிக்க பின்பு மௌலவி ஃபக்ருதீன் இம்தாதி  அதன் விளக்கவுரை நிகழ்த்தினார் இரண்டாம் நாள் (20-01-2015)இஷா தொழுகைக்குப்பின் மௌலவி ஃபக்ருதீன் இம்தாதி “சுபுஹு தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் ” مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ , فَانْظُرْ يَا ابْنَ آدَمَ لا يَطْلُبَنَّكَ اللَّهُ ...

Read More »

கேம்ப் தஃவா – ஜுபைல்-2 S K S மாதாந்திர பயான்

ஜுபைல்-2 -ல் கடந்த 15-01-2015 அன்று இஷா தொழுகைக்கு பின்னால் மாதாந்திர பயான் நிகழ்சி S K S கேம்ப்பில் நடைப்பெற்றது. இதில் மௌலவி ஃபக்ருதீன் இம்தாதி “தொழுகையின் சிறப்புகள்” என்ற தலைப்பில் துவக்கவுரையாற்றினார். அல்-ஜுபைல் தஃவா நிலையத்தின் அழைப்பாளர். மௌலவி யாசிர் ஃபிர்தவ்ஸி “தொழுகையில் ஏற்படும் தவறுகள்” என்ற தலைப்பில் வீடியோ கிளிப் காட்சியுடன் தொழுகையில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி விளக்கமளித்தார். பின்னர்  பேசிய தலைப்பிலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலுரைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது………கலந்துக்கொண்ட அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!

Read More »

கேம்ப் தஃவா – ஆர்ஸி-2 பயான் நிகழ்ச்சி

அல்-ஜுபைல், RC-கேம்ப்-2-ல் கடந்த 17-01-2015 அன்று இஷா தொழுகைக்குப்பின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடைப் பெற்றது. இதில் மௌலவி ஷரீப் பாகவி “மார்க்கத்தில் வறம்பு மீறாதீர்கள்” என்ற தலைப்பில் மார்க்க விஷயத்தில் மாநபி (ஸல்)  அவர்கள் கற்று தந்ததை காட்டிலும் வறம்பு மீறுபவர்களை கண்டித்து சிறப்புரை நிகழ்த்தினார்.பின்னர் பேசிய தலைப்பிலிருந்து கேள்விகள் கேட்க்கப்பட்டது சரியாக பதிலுரைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பின்னர் கலந்துக்கொண்ட‍ அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!

Read More »