தினசரி பாடங்கள்

[தொடர்: 11-100] ஜமாஅத் தொழுகையின் சிறப்பு

ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடைவீதியில் தொழுவதை விடவும் இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும். இது ஏனென்றால் ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது. அவர் தொழுது முடித்துவிட்டு அவ்விடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள், இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிரார்த்திக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்து) தொழுகையை எதிர் பார்த்து (தொழும் இடத்திலேயே இருந்து) கொண்டிருப்பவர் ...

Read More »

[தொடர்: 10-100] ஜமாஅத் தொழுகை

சந்தர்ப்பவாதிகளுக்கு மிகப் பாரமான தொழுகை இஷாவும் ஃப்ஜ்ருமாகும். இவ்விரண்டிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிந்துகொள்வார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள். “ தொழுகை நிலைநாட்டப்பட நான் கட்டளையிட்டு பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறி பிறகு என் வாலிப நேயர்களிடம் விறகுக்கட்டைகளைச் சேகரிக்கும்படி செய்து அவர்களுடன் சென்று ஜமாஅத்துக்கு வராதவர்களை அவர்களின் வீட்டோடு தீயிட்டுக்கொளுத்த நான் நினைத்தேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்;- அபூஹுரைரா (ரழி) நூல்: புஹாரி (657) முஸ்லிம். கண்பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் ...

Read More »

[தொடர்: 9-100] துஆ அங்கீகரிக்கப்படும் நேரங்கள்

“ஒரு அடியான் தன் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போதுதான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள்” என்பது நபிமொழி. (அறிவிப்பவர்:- அபூ ஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்) பாங்கு இகாமத்திற்கிடையே கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்பது நபிமொழி (அறிவிப்பவர்:-அனஸ் (ரழி) நூல்:  திர்மிதி) “இரண்டு துஆக்கள் நிராகரிக்கப்படமாட்டாது அல்லது நிராகரிக்கப்படுவதென்பது மிக குறைவு. அவை பாங்கின் போதும், சிலர் சிலரிடம் மோதும் போர்க்களத்தின் போதும் கேட்கப்படும் துஆக்களாகும்” என்பது நபி மொழி (அறிவிப்பவர்:- ஸஹ்ல் பின் ஸ்ஃத் (ரழி)  நூல்:அபூதாவுத்) “இரவை மூன்றாகப் ...

Read More »

[தொடர்: 8-100] அல்லாஹ்வின் மீது தவக்குல்-நம்பிக்கை வைத்தல்

وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّـهِ فَهُوَ حَسْبُهُ ۚ ﴿ الطلاق ٣﴾ யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கின்றரோ அவருக்கு அல்லாஹ்வே போதுமானவன்.(65: 3) اللَّـهُ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۚ وَعَلَى اللَّـهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ ﴿ التغابن ١٣﴾ அல்லாஹ் -அவனைத் தவிர வணக்கத்திர்க்குரிய இறைவன் இல்லை, மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை வைக்கட்டும். (64:13) மறுமை நாளின் காட்சிகளில் பல உம்மத்தினர் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டனர். அப்போது நான் ஒரு நபியைப் பார்த்தேன் அவருடன் சிறு ...

Read More »

[தொடர்: 7-100] சகுனம் பார்ப்பது

தொற்று நோய், சகுனம் பார்ப்பது (இஸ்லாத்தில்) இல்லாதது, எனினும் நல்ல சகுனம் எனக்கு விருப்பமானது. அதுவோ அழகிய வார்த்தையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( அறிவிப்பவர்:- அனஸ் (ரழி) நூல்: புஹாரி-5756, முஸ்லிம், திர்மிதி-1664 ) சகுனம் பார்ப்பது ஷிர்க்காகும் ( அறிவிப்பவர்:- இப்னு ம|ஸ்ஊத் (ரலி) நூல்:அபூதாவுத் ) பயன்கள் சகுனம் பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அது பறவைகள் அல்லது மற்றவற்றைக் கொண்டு சகுனம் பார்த்து ஒரு செயலைச் செய்யாது விட்டுவிடுவதற்குச் சொல்லப்படும். சகுனம் ஒரு செயலைச் செய்யாமல் விடுவதற்குக் ...

Read More »