Tag Archives: பெண்கள்

பெண்கள்மீது அவதூறு கூறுதல் – கேள்வி-பதில் (வீடியோ)

ஜுபைல் தஃவா நிலையம் – தமிழ் பிரிவு வழங்கிய இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி வழங்கியவர்: மௌலவி-பொறியாளர் ஜக்கரிய்யாஹ், அழைப்பாளர்,  தம்மாம், சவுதி அரேபியா. நாள்: 12 டிசம்பர் 2013 வியாழன் இரவு இடம்; ரீகல் கிளாசிக் ஹோட்டல். பெண்கள்மீது அவதூறு சொன்னதற்கான தண்டனைக்கு நான்கு சாட்சிகள் வேண்டுமா? [youtube id=pmnZtaRum4o]

Read More »

உயரிய சொர்க்கத்துக்கு உரியவர்கள் (வீடியோ)

பெண்களை குறித்து நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின்போது அரஃபா மைதானத்தில் வைத்து மக்களுக்கு உரையாற்றும்போது சொன்னார்கள், “நீங்கள் பெண்களின் விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், ஏனென்றால் பெண்களை அல்லாஹ் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உங்களுக்கு வழங்கியிருக்கிறான், எனவே நீங்கள் பெண்களின் விஷயத்தில் மிகவும் நீதமாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் பெண்களுக்கு தேவையான அனைத்தையும் வழங்கி, அவர்களை நல்ல முறையில் நிர்வகித்து வாருங்கள்” என்று எச்சரித்தார்கள்.  உங்களின் மனைவியரிடத்தில் யார் சிறந்தவரோ அவர்தான் உங்களில் சிறந்தவர் என்றும்  சொன்னார்கள். இவையெல்லாம் உயரிய சொர்க்கத்தைப் பெறுவதற்கான வழிகளாகும். இன்னும் பல செய்திகளை அறிய… (தொடர்க….) [youtube id=GfsLHQonXTs]

Read More »

மாற்றத்தின் நேரம் அதிகாலை (கட்டுரை)

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது. ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ் தொழுகையின் போது பள்ளிவாசலின் நிலையைப் பாருங்கள். பரிதாபமாக இருக்கும். சில பள்ளிவாசல்களில் ஒரு வரிசைகூட முழுமையாக இருக்காது. இதற்காகவா இவ்வளவு பொருள் செலவில் பரந்து விரிந்த பள்ளிவாசல்களைக் ...

Read More »