Tag Archives: வஹ்ஹாபி

[ தொடர் : 05 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு

இறுதியாக “தர்யிய்யா’ என்ற ஊரில் ஹிஜ்ரீ 1158 ஆம் ஆண்டு “அப்துர்ரஹ்மான் பின் சுவைலிம்’ “அஹ்மது பின் சுவைலிம் ” என்பவர்களிடம் விருந்தாளியாக தங்கினார்கள். மக்கள் இமாம் முஹம்மதின் பிரச்சாரத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவர்களுக்குப் பல தொல்லைகள் கொடுக்கின்ற இந்நிலையில், நாம் இமாம் முஹம்மதிற்கு ஆதரவு கொடுப்போமானால், “தர்யிய்யாவின்” அமீர் ஏதும் செய்துவிடுவாரோ. என இப்னு சுவைலிம் அஞ்சினார். ஆனால் உறுதியான ஈமானுடைய இமாம் முஹம்மது அவர்கள், இப்னு சுவைலுமுக்கு அமைதிகூறி பல உபதேசங்களைச் செய்து, நிச்சயமாக அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு ஆதரவு கொடுக்கின்றவர்களுக்கு எவ்விதக் ...

Read More »

முஹம்மத் இப்னு அப்துல்-வஹ்ஹாப் (ரஹ்) வரலாறு

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் பதிவு செய்த முதல் புத்தகம் (1979) – ஆசிரியர்: அஷ்ஷைஹ் அஹமது பின் ஹஜர் (ரஹ்) அவர்கள், கத்தார் அரசின் தலைமை நீதிபதி – தமிழாக்கம் : அஷ்ஷைஹ்: கமாலுத்தீன் மதனீ, நாகர்கோவில், தமிழகம், இந்தியா. முஹம்மத் இப்னு அப்துல்-வஹ்ஹாப் (ரஹ்) வரலாறு – புத்தகம் மின்னனுநுலை பதிவிறக்கம் செய்ய

Read More »

[ தொடர் : 04 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு

நஜ்து மாகாணதின் அரசியல் நிலை “இருபதாம் நூற்றாண்டில் அரபியர்கள்” என்ற புத்தகத்தில் காணப்படுவது போன்று மக்கள் மத்தியில் தெய்வீகச் சட்டம் செயல்படுத்தப்படவில்லை. அவர்கள் தலைவர்களின் மனோஇச்சைக்கிணங்க இயற்றப்படுவதே சட்டமாக இருந்தது. நீதி என்பதே காணப்படவில்லை, நஜ்து மாகாணம் பல ஊர்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வோர் ஊரையும் ஒரு தலைவன் ஆட்சி செய்து வந்தான். ஒர் ஊருக்கும் மற்ற ஊருக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கவில்லை. இத்தலைவர்களில் முக்கியமானவர் “அஹ்சா” என்ற ஊரில் “பனூ காலித்” என்பவர்களும், “உயைனா” என்ற ஊரில் “ஆலு முஅம்மர்” என்பவர்களும், ஹிஜாசில்” ஷரீபுகளுமாவார்கள். ...

Read More »

[ தொடர் : 03 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் வரலாறு

பஸராவில் இமாம் முஹம்மதின் ஆசிரியர்கள்: மதீனாவிலிருந்து ந‌ஜ்து மாகாணம் சென்று, அங்கு சில காலம் தங்கி மார்க்க மேதைகள் பலரிடம் கல்வி பயின்றார்கள். இவர்களில் “முஹம்மது மஜ்மூயி” என்பார் குறிப்பிடத்தக்கவராவார்கள். இமாம் முஹம்மத் பஸராவில் இருக்கும் காலத்தில் இலக்கணம், மொழி, ஹதீஸ் போன்ற கலைகளை அதிகம் பயின்று சில புத்தகங்களும் எழுதினார்கள். இஸ்லாத்தில் பித்அத் என்னும் புதுமையாகத் தோன்றியவற்றையும், அனாச்சாரங்களையும், சமாதி வழிபாட்டையும், இவ்வாறான இஸ்லாத்திற்கு முரணானவற்றையும் ஒழிப்பதிலேயே தம் அறிவையும், ஆராய்ச்சியையும் பயன்படுத்தினார்கள். தாம் கூறுகின்ற ஒவ்வொன்றுக்கும் தகுந்த, மிகத்தெளிவான குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையிலான ...

Read More »

[ தொடர் : 02 ] இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் கல்வி மற்றும் அறிவு தேடலுக்கான பயணங்கள்

இமாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தம் தந்தையிடம் ஹன்பலி மத்ஹபின் ஃபிக்ஹையும், குர்ஆன், ஹதீஸ் விளக்கங்களையும் கற்றார்கள். இவர்கள் சிறிய வயதிலிருந்தே திருக்குர் ஆன், ஹதீஸ் விளக்கங்களையும், இஸ்லாத்தின் கொள்கைகளையும் அறிவதில் மிக ஆர்வமுடையவராக இருந்தார்கள். இப்னு தைமிய்யா, இப்னு கையூம் போன்ற மேதைகள் எழுதிய புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை அதிகமாக படித்துவந்தார்கள். அதனைத் தொடர்ந்து புனித மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜுக் கடமைய நிறைவேற்றிய பின் மதீனா சென்று பெருமானார் (ஸல்) அவர்களின் பள்ளியை தரிசித்தார்கள். அதன் பின் பெருமானார் ...

Read More »